/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/norway minister.jpg)
நார்வேயை சேர்ந்த வலதுசாரியை மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் பெர் சாண்ட்பெர்க். பஹரே லெட்னஸ் என்னும் 28 வயது மாடலான இவருடன் கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் ரகசியமாக சென்ற இந்த சுற்றுலா சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி இப்படி ரகசியமாக ஒரு அமைச்சர் செல்வது நலத்திற்கு இல்லை என்று கடுமையாக விமர்சனத்திற்கு ஆளானார்.
இந்நிலையில், பெர் சாண்ட்பெர்க் அவருடைய கட்சி பதவியையும், மீன்வளத்துறை அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தெரிவிக்கையில், இது ஒரு நல்ல காரியம்தான்" என்றுள்ளார்.
Follow Us