KIM

வடகொரிய அதிபர் கிம் பற்றிய சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சமில்லை, அண்மையில் கரோனாதீவிரமாக இருந்த நிலையில் அவர் வெளியே வராமல் இருந்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால், திடீரெனவிழா ஒன்றில்அனைவரின் முன்பாகவும் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிம்.இதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன்பே பல முறை அவர் இறந்ததாக தகவல்கள் வெளியாகி, பின்னர் அவர் உயிருடன் இருப்பதாகசர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

Advertisment

இந்நிலையில் அவர்,அவரது மாமாவையேகொலை செய்ததாக தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பற்றி பத்திரிகையாளர் வுட்வேர்ட் என்பவர் 'ரேஜ்'என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகம்,கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜூலை வரை ட்ரம்ப்பிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

Advertisment

ஒரு நேர்காணலில்வடகொரிய அதிபர் கிம்பற்றிய கேள்விக்கு, 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில்தான் முதன்முதலில் நாங்கள் சந்தித்ததாககூறியட்ரம்ப், மிகவும் புத்திசாலியான கிம் அவருடைய வாழ்வில் நடந்தஅனைத்து நிகழ்வுகளையும்,அதேபோல் அவருடைய சொந்த மாமாவைஅவர் எப்படி கொலை செய்தார் என்பது பற்றியும் தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.