Advertisment

"கொஞ்சமா சாப்டுங்க" - மக்களுக்கு உத்தரவிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

kim jong un

வடகொரியா நாட்டில்உணவுப் பஞ்சம் தலை விரித்தாடிவருகிறது. கரோனாபரவல் காரணமாகச் சீனாவுடனான எல்லைகளைஅந்தநாடுமூடியுள்ளதால், சீனாவிலிருந்து கிடைக்கும்விவசாயப் பொருட்கள், உரங்கள்போன்ற உதவிகள் வடகொரியாவுக்குக் கிடைக்காமல் நின்றுபோயின. . அதேபோல், புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்தது. இதனால் தற்போது அங்கு உணவுப் பஞ்சம் உச்சத்தில் உள்ளது.

Advertisment

ஒரு கிலோ வாழைப்பழம் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 3,300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், பல்வேறு உணவுப் பொருட்களின் விளையும்கடுமையாக உயர்ந்துள்ளதாகவும்அண்மையில் தகவல் வெளியானது. தன் நாட்டில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டிருப்பதை வடகொரியா அதிபர்கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டிருந்தார்.

Advertisment

இந்தநிலையில்வடகொரியா அதிபர்கிம் ஜாங் உன், தனது நாட்டு மக்களுக்கு குறைவாக சாப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உணவு பற்றாக்குறைக்கு பல்வேறு காரணங்களைத்தெரிவித்தகிம் ஜாங் உன்,விவசாயத் துறை தனது தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை மோசமான நிலையில் உள்ளதாகத்தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேபோல் 2025 ஆம் ஆண்டு வரை வடகொரியாவில் உணவுப் பஞ்சம் நிலவும் என்றும், 2025 வரை சீனாவுடனான வர்த்தகம் தொடங்க வாய்ப்பில்லை என்றும் வடகொரியஅதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

food Kim Jong un North korea
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe