உலகை அச்சுறுத்தி வரும் கரோனாவிற்கெதிராகதடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பணக்கார நாடுகளைத்தவிர்த்து, மற்ற நாடுகளில் தடுப்பூசித்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து ஏழைநாடுகளுக்குத்தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையில் யுனிசெஃப்பின் கோவேக்ஸ் என்றதிட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.
இந்தநிலையில்கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் சீனா வழங்க முன்வந்த30 லட்சம் தடுப்பூசிகளை, வடகொரியா ஏற்கமறுத்துள்ளது. தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமுள்ள நாடுகளுக்கு அந்ததடுப்பூசிகளை தருமாறு வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து தங்கள் நாட்டில் கரோனாபாதிப்பு இல்லை எனக் கூறி வருவது இங்கு கவனிக்கத்தக்கது.
வடகொரியா, கடந்த ஜனவரி மதமே தனது எல்லைகளை மூடிவிட்டது. இதனால் சீனாவிலிருந்துஉணவு, உரம் மற்றும் எரிபொருள்கள் வராததால் அண்மையில் வடகொரியா கடுமையான உணவுப் பஞ்சத்தில் சிக்கித்தவித்தது குறிப்பிடத்தக்கது.