Skip to main content

விமானப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்புவது எப்போது..? சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் கணிப்பு...

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

normal life in aviation

 

2024 ஆம் ஆண்டுதான் சர்வதேச விமானப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பும் எனச் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் கணித்துள்ளது. 

 

கரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் இயல்புநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான போக்குவரத்துக்கு முற்றிலும் முடங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகப் பல நாடுகளும் தங்களது நாட்டின் சர்வதேச விமானச் சேவைகளை முடக்கியுள்ளன. தற்போதைய சூழலில், சில நாடுகளில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், விமானப் போக்குவரத்து குறைந்த பயணிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உலக அளவில் விமானப் போக்குவரத்தானது 2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனச் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

 

தற்போதைய கணிப்பின்படி கரோனா ஊரடங்கால் 2020ஆம் ஆண்டில் 55 சதவீதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் எனவும், இந்த நிலை சீரடைய 2024ஆம் ஆண்டுவரை ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்