noble prize

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த கண்டுப்பிடிப்புகள், சாதனைகளை நிகழ்த்துவோருக்கு வருடா வருடம் நோபல் பரிசு கொடுத்து கவுரவித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெராடு மவுரோ மற்றும் கனடாவை சேர்ந்த டோன்னா ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதேபோல மருத்துவத்திற்கான நோபல் பரிசு மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி அலீசன், ஜப்பானின் தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.