Advertisment

நோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய டிரம்ப்பின் அந்த ஒற்றை கேள்வி..!

யாஜிடி இனப் பெண்களுக்காகப் போராடிய ஈராக்கை சேர்ந்த நாடியா முராத்திடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நீங்கள் எதற்காக நோபல் பரிசு வாங்கினீர்கள்" என கேட்டது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

Advertisment

noble prize winner nadia murad shocked by donald trump's question

ஐ.எஸ். அமைப்பால் நடந்த கொடுமைகள் மற்றும் பெண்களின் பல மனரீதியான போராட்டங்களுக்கான தீர்வுகளுக்காக போராடியதற்காக கடந்த ஆண்டு ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் என்ற பெண்ணுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் மதச் சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவில் 3 நாட்கள் நடந்த மாநாட்டில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினர். அப்போது நடியா தனது வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதை குறித்து பேசுகையில் பாதியில் குறுக்கிட்ட டிரம்ப், "உங்களுக்குத்தானே நோபல் பரிசு கிடைத்தது? அது பாராட்டுக்குரியது. உங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது?” என கேள்வி எழுப்பினார்.

இதனைகேட்டு சற்று அதிர்ச்சியடைந்த நாடியா பின்னர் சுதாரித்துக் கொண்டு, பெண் அகதிகளின் மறுவாழ்வுக்காக தாம் உழைத்தமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த கேள்வியால் அங்கிருந்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதேபோல அங்கு வந்திருந்த பலரையும் டிரம்ப்பினால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

America noble prize trump
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe