ADVERTISEMENT

2021ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

03:35 PM Oct 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், 2021ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று (04.10.2021) அறிவிக்கப்பட்டது. வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றைத் தொடாமல் உணரக்கூடிய கருவி (சென்சார்) கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது 2021ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசல்மேன், ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை அளிக்க ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் முடிவு செய்துள்ளது. சிக்கலான இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதில் அற்புதமான பங்களிப்பை அளித்ததற்காக இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT