
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வு குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பிரான்சைச் சேர்ந்த அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளாசர், ஆஸ்திரியாவை சேர்ந்த ஷிலிங்கர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.