Nobel Prize for Literature announced to a woman writer han kang

Advertisment

மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.

அதன்படி, மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்குப் பிறகு மைக்ரோ ஆர்.என்.ஏ. என்ற செல்லின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்ட உள்ளது. அதேபோன்று, இயற்பியலுக்கான நோபல் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் எம். ஜம்பர் 3 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மூவரும் நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்தநிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் நுட்பங்களை எடுத்துரைக்கும் கவிதைகளுக்காக ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment