2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர், மைக்கேல் கீரிமர் ஆகியோருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவில் பிறந்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது பெண் ஆவார். ஏற்கனவே அமைதி மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.