Skip to main content

நோபல் பரிசுபெற்ற இந்தியவம்சாவளி எழுத்தளார் வி.எஸ் நைபால் காலமானார்

Published on 12/08/2018 | Edited on 12/08/2018

 

NOPAL

 

 

 

நோபல் பரிசுபெற்ற இந்தியவம்சாவளி  சேர்ந்த எழுத்தாளர்  வி.எஸ் நைபால் லண்டனில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

 

1932-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவான ட்ரினாட்டில் பிறந்த அவர் தனது பெற்றோர்களுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். அதன்பின் எழுத்தாளராக உருவெடுத்த வி.எஸ் நைபால் 30-க்கு மேற்பட்ட புத்தகங்களை  எழுதியுள்ளார். அவர் எழுதிய '''ஏ ஹௌஸ் மிஸ்டர் பிஷ்வால்'' என்ற நாவல் அதிக கவனத்தைப்பெற 1971-ஆம் ஆண்டு ''இன் ஏ ப்ரீ ஸ்டேட்'' என்ற புத்தகத்திற்கு புக்கர் விருதும் அதனை தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றார்.

இந்நிலையில் 85 வயதான அவர் நேற்று லண்டனில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என அவரது மனைவி நிதிரா அல்வி தெரிவித்துள்ளார்.

 

அவரது மறைவுக்கு சர்வதேச எழுத்தளார்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதிபுருஷ் வசனகர்த்தாவுக்கு கொலை மிரட்டல்; ஒப்புதல் கொடுத்த படக்குழு

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

Death threat to Adipurush narrator

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியான போது கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் திரையிடும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

 

இந்நிலையில் இப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த கொலை மிரட்டல் சம்பவம் உண்மையானது என தெரிய வந்த நிலையில் மும்பை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார். இப்படத்தில் ராமர் குறித்து எழுதப்பட்ட வசனங்கள் சர்ச்சை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பாலிவுட் பாடலாசிரியரும், இப்படத்தின் வசனகர்த்தாவுமான மனோஜ் முண்டாஷிர் போலீசில் புகார் அளித்திருந்தார். கொலை மிரட்டலைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்க படக்குழு  ஒப்புதல் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.