Advertisment

தலிபானுக்கு அங்கீகாரமா?- கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம்!

justin tredeau

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இதற்கிடையே சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க முன்வந்துள்ளன. மேலும் சில நாடுகள். தாலிபன்களில் நடவடிக்கைளை பொறுத்துதலிபான் அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவு எடுக்கவுள்ளன.

Advertisment

இந்தநிலையில்தாலிபன்அரசை அங்கீகரிக்கப் போவதில்லை எனக் கனடா பிரதமர்ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாகஅங்கீகரிக்கும் திட்டம் எதுவும் கனடாவிடம்இல்லை. 20 வருடங்களுக்கு முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கூட கனடா அவர்களை அங்கீகரிக்கவில்லை" எனக்கூறியுள்ளார்.

மேலும் அவர், "தற்போது எங்களதுகவனம் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியே அழைத்து வருவதில்தான் இருக்கிறது. தலிபான்கள், மக்கள் எந்த தடையும் இல்லாமல் விமான நிலையத்திற்கு வருவதை உறுதி செய்யவேண்டும்"எனவும் கூறியுள்ளார்.

afghanistan talibans Canada justin tredeau
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe