Advertisment

முகக்கவசத்திற்கு குட்பை சொன்ன அரசு... சீனா சந்தித்துள்ள மாற்றங்கள்...

no need to wear mask in beijing

Advertisment

கரோனா முதன்முதலில் சீனா மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது.

சீனாவில் உள்ள வர்த்தக நகரான ஷாங்காயில் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பங்கேற்பதற்கும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல 60 சதவீத உள்நாட்டு விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதனிடையே சீன தலைநகரான பெய்ஜிங்கில் இனி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத்தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. மக்கள் இனி சுதந்திர காற்றைச் சுவாசிக்கலாம் எனக் கூறியுள்ள சீன அரசு, மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியைத் தொடரவேண்டும் எனவும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல ஒத்திவைக்கப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் வருகிற 22-ஆம்தேதி முதல் தொடங்க உள்ளது. முன்னதாக 21-ஆம்தேதி பெய்ஜிங்கில் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டில் 5,000 உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

china corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe