Skip to main content

ஆப்கானில் இனி வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்த தடை!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

jkl

 

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் அங்கு ஆட்சி பொறுப்பைக் கைப்பற்றினர். தலிபான்கள் கைக்கு ஆட்சி போனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். பெண்களுக்குக் கல்வியுரிமை மறுப்பு, வேலைக்குச் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு பெண்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர். இதற்கு உலக நாடுகள் பலவும் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்து வந்தன. இந்நிலையில், தற்போது உலக நாடுகளின் வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்த அந்நாட்டு மக்களுக்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்கள் அழகு நிலையத்திற்குத் தடை விதித்த நாடு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

nn

 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்த நாட்டில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாகப் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. பள்ளி, கல்லூரிக்கு பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பூங்கா, திரையரங்கம் உள்ளிட்ட பொது இடங்களிலும் பணியாற்ற தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

 

பெண்கள் கல்வி கற்கக் கூடாது; பணிக்குச் செல்லக் கூடாது. ஆண் துணையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. இவற்றை மீறினால் மரண தண்டனை கூட வழங்கப்படும். கடந்த முறை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது, பெண்களுக்கு விதிக்கப்பட்ட சட்டங்கள் இவை. இம்முறை பெண்களுக்கு சில சுதந்திரங்களை வழங்கப்போவதாக தலிபான் அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அது வெற்று அறிவிப்பாகவே இருக்கிறது. அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான அழகு நிலையங்களை மூட தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கான அழகு நிலையங்களுக்கு வாய் மொழியாகத் தடை விதித்த தாலிபான் அரசு பெண்கள் அழகு நிலையங்களின் உரிமையை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

 

 

Next Story

மசூதியில் குண்டு வெடிப்பு... 30 பேர் உயிரிழப்பு!

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

incident in afghanistan

 

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர்.  இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக  முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமான மாலை நேர தொழுகையின் போது பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் பலர் சிக்கி படுகாயம் அடைந்துள்ள நிலையில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது.   ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்குப்பின்னால்  இதேபோல் பலமுறை மசூதிகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.