பிரபல அமெரிக்க தொழிபதிபர் எலன் மஸ்க், தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி என்றாலும் என் கையில் அந்த அளவு பணமில்லை என வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வெர்னான் அன்ஸ்வொர்த் குறித்து அவதூறு செய்திவெளியிட்டதற்காக, மானநஷ்ட வழக்கை சந்தித்து வருகிறார் தொழிலதிபர் எலன் மஸ்க். இந்த வழக்கு விசாரணை தற்போது, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அப்போது, நீதிபதி மஸ்கிடம் உங்களின் சொத்து மதிப்பு என்ன, எவ்வளவு பணம் தற்போது வைத்துள்ளீர்கள்என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மஸ்க், என் கையில் ரொக்கமாகப் பணம் இல்லை என பதிலளித்துள்ளார். இவரின் பதிலால் அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.