No action on reporting; Arnold entered the field

Advertisment

தன் வீட்டருகே இருந்த சாலை பள்ளத்தை சீரமைக்க கோரி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சாலையில் இறங்கி சீரமைப்பு பணியில் ஈடுபடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலக பிரபல நடிகரான அர்னால்டு வசித்து வருகிறார். அவர் வசித்து வரும் வீட்டின் அருகே உள்ள பகுதியில் உள்ள சாலையில் பள்ளம் ஒன்று இருந்தது. இதனால் அடிக்கடி அந்தப் பகுதியில் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து புகாரளித்து மூன்று வாரங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் களத்தில் இறங்கியநடிகர் அர்னால்ட் தார் கலந்த ஜல்லியை கொட்டி அந்த பள்ளத்தை சரி செய்தார். இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு 'புகார் அளிப்பதை விடுத்து நீங்களே இறங்கி பிரச்சனையை சரி செய்யுங்கள்' என அட்வைஸும் செய்துள்ளார் அந்த டெர்மினேட்டர் நடிகர்.

Advertisment