மரண தண்டனை வழங்க நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்த முடியுமா?

நைட்ரஜன் வாயுவை சுவாசிக்கச் செய்து மரண தண்டனை வழங்க அமெரிக்காவில் பரிசீலனை செய்துவருகின்றனர்.

அமெரிக்காவின் ஹோக்லகோமா மாகாணத்தில் கடந்த 2015ஆம் ஆண்டோடு மரண தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. மரண தண்டனை வழங்கும்போது ஏற்படும் குலறுபடிகளால் சம்மந்தப்பட்டவருக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள்தான் இதற்குக் காரணம்.

Nitro

அங்கு மரண தண்டனை வழங்க குறிப்பிட்ட சில மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த மருந்துகளை சரியாக கையாள முடியாத காரணத்தால் தண்டனையை அனுபவிப்பவர் கடும் துன்பத்திற்கு ஆளாக நேரிடுகிறது. சில சமயங்களில் மரணத்திற்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் அவர் கோமாவில் கிடப்பது வரையிலான விபத்துகள்நடந்த நிலையில், மருந்து நிறுவனங்கள் கொலை செய்யும் மருந்துகளை விநியோகிக்க மறுத்துவிட்டன.

இந்நிலையில், ஹோக்லகோமா மாகாணத்தின் பொது வழக்கறிஞர் மைக் ஹண்டர் மற்றும் திருத்தங்கள் துறை இயக்குனர் ஜோ அல்பாக் ஆகியோர் கொண்ட குழு கலந்தாலோசித்து இனி மருந்துகளுக்காக காத்திருக்காமல்,மரண தண்டனை வழங்க நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். மருந்துகளை விட மந்தவாயுவான நைட்ரஜன் வாயுவை கையாளுவது எளிமையானது போன்ற பல காரணங்கள் இதற்காக முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், நைட்ரஜன் வாயுஉபயோகிக்கத் தொடங்கும் தேதி உள்ளிட்டஅதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரைவெளியாகவில்லை.

America death sentence Execution
இதையும் படியுங்கள்
Subscribe