nirmala sitharaman

மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் சுற்று பயணமாக ஃப்ரான்ஸ் சென்றுள்ளார். அங்கு சென்ற நிர்மலா, ஃப்ரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பாலேயை சந்தித்தார்.

அவரை சந்தித்தபின் நிர்மலா சீதாராமன் ரஃபேல் போர் விமானம் உருவக்கப்படும் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டார். இறுதியில் ரஃபேல் போர் விமானத்தில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியிடும் ஃப்ரான்ஸ் பத்திரிகையின் செய்திக்கு நிர்மலா சீதாரமன் கூறியதாவது, “ ரபேல் விமானம் ஒப்பந்தம் இந்திய- பிரான்ஸ் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம். இதில் டாசல்ட் நிறுவனம் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது. இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை” என்றார்.

Advertisment