Advertisment

நிரவ் மோடியை நாடுகடத்தும் நடவடிக்கை;பெற்றுக்கொண்டது இங்கிலாந்து!

NIRAV

பிரபல வைர நகை வியாபாரியான நிரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிட்டத்தட்ட 13000 கோடி ரூபாய்க்கு மேல்கடன் வாங்கி மோசடி செய்துதிரும்ப செலுத்தாமல் சில மாதங்களுக்கு முன்வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

Advertisment

இந்த மோசடி குறித்து சிபிஐ அமலாக்கதுறையும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. அதேபோல் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிரவ் மற்றும் அவர் உறவினர் மெகுல் இருவரையும் இந்தியாகொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் புலனாய்வுத் துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

Advertisment

இதனை தொடர்ந்து அண்மையில்ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள நிரவ் மோடியை பிடிக்க உத்தரவிடும்படியும், நாடுகடத்த கோரியும்இங்கிலாந்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. மேலும்இந்தியவெளியுறவுத் தூதரகம் அந்த கடித்தை இங்கிலாந்து அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மத்திய அரசால் வலியுறுத்தப்பட்ட நிலையில் தற்போது அந்த கடிதம் இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வங்கிக்கடன் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய்மல்லையாவின் வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

England India Nirav modi pnbfraud niravmodi diamond
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe