பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவை விட்டு வெளியேறினர். இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்துவரும் அவரை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி திரியும் வீடியோ வெளிவந்தது.

nirav

Advertisment

இதனையடுத்துஅவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை நீரவ் மோடியை பிடிப்பதற்கு வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், லண்டனில் வைத்து நிரவ் மோடி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.