Advertisment

'இதுவே எனது கடைசி காதல்' - 92 வயதில் 5வது திருமணம்

ninety two years old american journalist marriage issue

Advertisment

மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது 92வது வயதில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில்பிறந்து அமெரிக்கா குடியுரிமையுடன்அமெரிக்காவில் வசித்து வருபவர் ருபேர்ட் முர்டாச். மிக நீண்டகாலமாக சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் பல பத்திரிகைகளில் பணியாற்றி வருபவரும், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளருமான ருபேர்ட் முர்டாச் தன்னுடைய 92வது வயதில் 5வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் 66 வயதாகும் ஆன் லெஸ்லிஸ்மித் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும்தெரிவித்ததுடன், இதுவே எனது கடைசி காதலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் காதலியான ஆன் லெஸ்லி பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார்.

ருபேர்ட் பல்வேறு காலகட்டத்தில் இதுவரை நான்கு பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், தற்போதுகாதல் வயப்பட்டு 5வது திருமணம் செய்யவுள்ளார். இது தொடர்பான செய்திகள் தற்போது சர்வதேச அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

marriage journalist America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe