Skip to main content

ஒரு உடைந்த ஃபோனை வைத்து உலக அளவில் பிரபலமான இளைஞர்கள்...

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

போதுமான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் யூடியூபை பார்த்து கிராஃபிக்ஸ் கற்றுக்கொண்டு, உடைந்த ஸ்மார்ட் போனை வைத்து நைஜீரியா இளைஞர்கள் சிலர் அந்த நாட்டின் முதல் science fiction குறும்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

 

nigerian youths scifi shortfilm shot by mobile goes viral

 

 

இவர்களின் படைப்பு தற்போது உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வடக்கு நைஜீரியாவில் உள்ள கடூனா என்கிற மாநிலத்தில் வசித்து வரும் 8 இளைஞர்கள் ஒன்றிணைந்து யூடியூபை பார்த்து கிராஃபிக்ஸ் கற்றுக்கொண்டு, பின்னர் ஸ்மார்ட் போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் ரிப்பேர் ஆன ஒரு பழைய லேப்டாப் மூலம் எடிட்டிங் பணிகளை செய்துள்ளனர். பணம் கொடுத்து கிராஃபிக்ஸ் (Graphics) கற்றுக்கொள்ளவோ, படம் எடுக்க தேவையான கருவிகளை வாங்கவோ வழி இல்லாத நிலையில், இந்த இளைஞர்களின் முயற்சி பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, அதிநவீன உபகரணங்களின் உதவியோடு சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு உடைந்த ஸ்மார்ட் ஃபோனை மட்டும் வைத்து சயின்ஸ் ஃபிக் ஷன் குறும்படம் எடுத்த இவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். உலக அளவில் பல பிரபலங்களும் இவர்களை வியந்து பாராட்டி வருகின்றனர். மேலும் திரைத்துறையை சேர்ந்த பலரும் தற்போது இந்த இளைஞர்களுக்கு உதவ ஆரம்பித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய அளவில் விருது பெற்ற குறும்படம்; படக்குழுவினருக்கு முன்னாள் நீதிபதி வாழ்த்து

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

atcham thavir short film won national level former judge wishes

 

டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குறும்பட போட்டியில் தமிழகத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட அச்சம் தவிர் குறும்படம் தேசிய அளவில் 3 ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து படத்திற்கான பல்வேறு உதவிகள் செய்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உதவிய அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், அமைப்பின் கெளரவ தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

மேலும் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஆர். கே. குமார், பொதுச் செயலாளர் முனைவர் வி. எச்.சுப்ரமணியம் உள்ளிட்டோரும் அச்சம் தவிர் பட குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இப்படம் உருவாக காரணமாக இருந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.கே. குமார் மற்றும் பொதுச் செயலாளர் முனைவர் வி. எச். சுப்பிரமணியத்தையும் பட குழுவினர் கோவை மாவட்டம் கணபதியில் உள்ள  தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆதரவுக்கு பட குழுவின் சார்பில் நன்றியும் , வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அச்சம் தவிர் குறும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்பின் சார்பில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் அனுராஜ்க்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் அச்சம் தவிர் படத்தின் இயக்குநர் குமார் தங்கவேல், இணை இயக்குநரும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் அங்கமுத்து, நடிகர் அசோக், குமார், ஹரிஹரசுதன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் துணைத்தலைவர் நாராயண செல்வராஜ் உறுப்பினர் அப்பு ஜெயபிரகாஷ் உதவி தொகை பெற்ற மாணவர் அனுராஜ் அவரது பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

Next Story

போதைப்பொருள் கடத்திய நைஜீரியர்; சென்னை நீதிமன்றம் அதிரடி

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

 chennai special court judgement delivered for nigerian involved illegal work

 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த காட்வின் என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, காட்வினிடம் இருந்த போதைப்பொருளைக் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கானது சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, போதைப்பொருளை கடத்தி வந்த காட்வினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.