Skip to main content

20,000 பெண்கள் பணத்திற்காக விற்கப்பட்டது கண்டுபிடிப்பு; 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்...

Published on 23/01/2019 | Edited on 23/01/2019

 

tght

 

பணத்திற்காக பெண்களை கடத்தி விற்கும் தொழில் ஆப்பிரிக்க கண்டத்தில் பெருமளவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நைஜிரியாவிலிருந்து இதுவரை 20,000 இளம் வயது பெண்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நைஜிரியாவில் நிலவும் வறுமையான சூழலை பயன்படுத்திக்கொள்ளும் சிலர், மலேசியாவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை, மாதம் 70,000 ரூபாய் சம்பளம் என அந்த பெண்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி மாலி, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பாலியல் தொழிலாளிகளாக விற்று வந்துள்ளனர். இது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சூழ்நிலையில் மாலி நாட்டில் உள்ள மூன்று விடுதிகளில் இருந்து மட்டும் 104 பெண்கள் மீட்கப்பட்டுள்ளார். அதில் பெரும்பாலான பெண்கள் 13 முதல் 24 வயதுக்குள் உள்ளவர்கள். மேலும் இது குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில், கடத்தப்படும் பெண்களில் 77 சதவீத பெண்கள் கடத்தப்பட்டவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்த தனி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போதைப்பொருள் கடத்திய நைஜீரியர்; சென்னை நீதிமன்றம் அதிரடி

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

 chennai special court judgement delivered for nigerian involved illegal work

 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த காட்வின் என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, காட்வினிடம் இருந்த போதைப்பொருளைக் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கானது சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, போதைப்பொருளை கடத்தி வந்த காட்வினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

 

 

Next Story

பிரதமர் மோடியின் மாடல்; நைஜீரியாவில் பெரும் பதற்றம் 

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

200 and 500 rupee notes have been declared invalid  Nigeria and people are suffering

 

இந்தியாவைப் போன்று நைஜீரியாவில் மேற்கொண்ட அதே நடவடிக்கையால் அந்நாட்டில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது என திடீரென அறிவித்திருந்தார். அதன் பெயர் டீமானிடைசேஷன் எனக் கூறப்பட்டது. மேலும், நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இத்தகைய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறியிருந்தார். இது நாட்டு மக்களுக்கு பேரிடராக அமைந்தது எனக் கூறுவது தான் யதார்த்தம்.

 

இந்நிலையில், இந்திய அரசைப் பின்தொடர்ந்து நைஜீரியாவிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்தாண்டு அக்டோபரில் அறிவித்திருந்தது. அதன்படி 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன. இந்த நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள ஜனவரி 31ம் தேதியை கடைசி நாளாக அறிவித்த நிலையில்  பிப்ரவரி 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், அங்குள்ள வங்கிகளில் புதிய நைரா நோட்டுகள் போதுமான அளவில் இல்லாததால், நைஜீரியன் நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே சமயம், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு வங்கிகள் விதித்துள்ளது. இதனால் கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

 

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த நைஜீரியன் நாட்டு மக்கள், ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி கிளைகளையும் ஏடிஎம் மையங்களையும் அடித்து நொறுக்கிய பொதுமக்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக அரசு அலுவலகங்கள், முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நைஜீரியா நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

சிவாஜி