/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dwdwwee.jpg)
உலகில் கரோனா தொற்றைச்சிறப்பாகக் கையாண்ட சில நாடுகளில், நியூசிலாந்தும் ஒன்று. உலகம் முழுவதும் லட்சக் கணக்கானோர் கரோனாவிற்குபலியாகியுள்ள நிலையில், நியூசிலாந்தில் இதுவரை கரோனாவிற்கு26 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த ஆறுமாதங்களாகபுதிய கரோனா பாதிப்பு எதுவும் பதிவாகாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில்தற்போது, எந்தவித வெளிநாட்டுத் தொடர்பும் இல்லாத ஒரு நபருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்துநியூசிலாந்தில் நாடு தழுவிய மூன்றுநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளநபர் ஆக்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு மட்டும் ஒருவாரம்ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பாதிக்கப்பட்ட நபருக்கு டெல்டா வகை கரோனா வைரஸ் பாதித்துஇருக்கலாம் எனவும், டெல்டா வைரஸைசாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், "டெல்டா வைரஸைகட்டுப்படுத்த தவறினால் என்ன ஆகும் என்பதைப் பிற இடங்களில் பார்த்தோம். நமக்கு ஒரு வாய்ப்புதான் கிடைக்கும்" எனவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)