/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kuwait.jpg)
குவைத் நாட்டைச் சேர்ந்த இருவர் சில தினங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, நீதிபதியின் முன்னால் பதிவுத் திருமணமும் செய்துகொண்டுள்ளனர். ஆனால் அவர்கள்திருமணம் செய்துகொண்டமூன்றாவது நிமிடமே விவாகரத்தும் பெற்றுள்ளனர்.
திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த இருவரும் நீதிபதியின் முன்னால் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கணவர், மனைவியை ‘முட்டாள்’ என்று திட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த மனைவி திருமணத்தை நடத்தி வைத்த நீதிபதியிடமே திருமணத்தை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். அதனை ஏற்ற நீதிபதி, திருமணஒப்பந்தம் முறிக்கப்பட்டு விவாகரத்து என்று அறிவித்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே திருமண வாழ்வை வாழ்ந்துள்ளனர். அதேசமயம் இதுபோல் நடப்பது குவைத்து வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us