நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருவேறு மசூதிகளில் நேற்று, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதானவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாக்கி சூடு நடைபெற்ற நேரத்தில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் உட்பட மற்ற வீரர்களும் அந்த மசூதியில் இருந்துள்ளனர். அதேசமயம், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அந்தத் தாக்குதலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Advertisment

new zealand

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானதாகவும், 20 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிரென்டனை காவலில் வைப்பதற்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.