Skip to main content

அவர் மட்டும் இல்லனா நான் இல்ல... உயிர் தப்பிய இந்தியர்...!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருவேறு மசூதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானதாகவும், 20 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 Christchurch terror attack


இந்த நிலையில் அந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய ஃபைஸல் சயீத் என்பவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 100 சதுர அடி இருந்த மசூதியில் நாங்கள் அவர்கள் தொழுகை செய்துகொண்டிருந்தபோது. மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் மசூதியினுள் நுழைந்து சரமாரியாக சுடத் தொடங்கினார். 
 

இதுபோன்று எதிர்பாராத சமயத்தில் ஒரு சம்பவம் நடக்கும்போது நம் இதயம் படபடப்பினால், வழக்கத்தைவிட அதிகமாகத் துடிக்கும். அந்த நேரத்தில் நம்மால் எதுவும் செய்யவோ, யோசிக்கவோ முடியாது. ஆனால் அந்த நேரத்திலும் ஒருவர் நிலைமையை உணர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பின்னாலில் இருந்து மடக்கிப் பிடித்தார்.


அதனால், அந்த நபர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. அவரும் மசூதியில் இருந்து தப்பித்து ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது.  அந்த நபர் மட்டும், தாக்குதல் நடத்திய நபரை பிடிக்கவில்லை என்றால், இந்த சம்பவம் இன்னும் மோசமானதாக இருந்திருக்கும். நானும் இப்படி நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவரை கண்டுபிடித்து நன்றி கூறுவேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய்ப்பை இழந்த பாக்! நியூஸியை எதிர்கொள்ளும் இந்தியா! 

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Pak missed the chance! India facing Newsi!

 

உலகக் கோப்பை லீக் போட்டியின் 43வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கத்தா மாநிலம், ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான டேவிட் மாலன் 39 பந்துகளில் 31 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 61 பந்துகளில் 59 ரன்களையும் குவித்து தங்களது விக்கெட்களை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய ரூட் 72 பந்துகளில் 60 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஏனைய வீர்கள் 30 ரன்களுக்குள்ளாகவே ஸ்கோர் செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 337 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் எந்த வீரரும் சதம் அடிக்காமலே 337 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரை, ஷகீன் அஃப்ரிடி 2 விக்கெட்களையும், மொஹமது வாசீம் 2 விக்கெட்களையும், அஹமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஹரிஸ் ரவூஃப் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

 

இந்தப் போட்டியில், 6.2 ஓவர்களில் 338 இலக்கை அடைந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் எனும் நிலை இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிறகு 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. 

 

இதன் மூலம் தற்போது, இந்தியா, தென் ஆப்பிரகா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. மேலும், நவம்பர் 15ம் தேதி மும்பையில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஒரு அரை இறுதி போட்டியிலும், நவம்பர் 16ம் தேதி கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மற்றொரு அரை இறுதி போட்டியிலும் மோதுகின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெரும் இரு அணிகள் குஜராத் மாநிலம், அஹமாத்பாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டியில் மோதும். 

 

 

Next Story

IND vs NZ: நிலைத்து நின்ற கோலி; நியூசிலாந்தை வென்ற இந்தியா!

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Standing Goalie; India beat New Zealand

 

உலகக் கோப்பையின் 21வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கான்வே ரன் கணக்கை தொடங்கும் முன் அவரது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான யங் 17 ரன்களில் ஷமி பந்தில் க்ளீன் போல்டு ஆனார். 19/2 என்று நியூசிலாந்து தடுமாற பின் இணைந்த ரச்சின் மற்றும் மிட்செல் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் இணைந்து பொறுமையாக ஆடி ரன்கள் குவித்தனர். ரச்சின் 12 ரன்களில் ஷமி பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா நழுவ விட்டார்.

 

பின்னர் பவுலிங்கை மாற்றி, மாற்றியும் விக்கெட் மேற்கொண்டு விழாமல் இருவரும் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து ஆடினர். ஒரு வழியாக ரச்சினை ஷமி 75 ரன்களில் அவுட் ஆக்கினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் மிட்செல் நங்கூரம் போல நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு பிலிப்ஸ் மட்டும் துணை நின்று 23 ரன்கள் எடுக்க, அதிரடியாக ஆடிய மிட்செல் சதமடித்து அசத்தினார். ஒரு நாள் போட்டிகளில் அவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். இறுதிவரை களத்தில் நின்ற மிட்செல் 130 ரன்கள் எடுத்து 49.5 ஓவரில் அவுட் ஆனார். இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.

 

இந்திய அணி 274 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் அதிரடியாய் ஆடி ரன்கள் சேர்த்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஃபெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் கில்லும் அதே ஃபெர்குசன் பந்தில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ், கோலி இணை நிதானமாக ஆடியது. இந்நிலையில் இந்திய அணி 15.4  ஓவர்களில் 100-2 என்று ஆடிக் கொண்டிருந்த போது பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கப்பட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் 33 ரன்களில் போல்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் , கோலி இருவரும் சிறப்பாக ரொடேட் செய்து ஆடினர்.

 

batting kohli; India beat New Zealand live score update

 

எதிர்பாராத விதமாக ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அதிரடி வீரர் சூர்யா 2 ர்ன்களில் ஃபீல்டரை சரியாக கவனிக்காமல் அவசரப்பட்டு ரன் ஓட முயன்று ரன் அவுட் ஆனார். பின்னர் கோலியுடன் ஜடேஜா இணைந்தார். கடந்த உலக கோப்பை போல ஆகிவிடுமோ என்று ரசிகர்கள் கவலை கொள்ள, இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஒன்று, இரண்டாக ரன் சேர்த்த இந்த இணை, அவ்வப்போது பவுண்டரி அடிக்கவும் தவறவில்லை. மீண்டும் ஒரு சதம் அடிப்பார் கோலி என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக 95 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா 39 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இறுதி வரை களத்தில் நின்று வெற்றிக்கு துணை புரிந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார். 

- வெ.அருண்குமார்