உலகின் பல்வேறு நாடுகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.
இந்தியா, தாய்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, வடகொரியா, ஹாங்காங், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.புத்தாண்டு பிறந்ததையொட்டி உலகின் மிக உயரமான துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் வான வேடிக்கை களைகட்டியது.
இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தலங்கள் யாவும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அரசின் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி பொதுமக்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடினர்.