Advertisment

கரோனாவின் மூன்று புதிய அறிகுறிகள்... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு...

symptoms of corona

கரோனா வைரஸ் தொற்றுக்கான மூன்று புதிய அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Advertisment

சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகமும் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ளது. நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவரை எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டறியப்படவில்லை. அதேபோல இதனால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தவும், வேறு சில நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளே நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸுக்கான அறிகுறிகளாகக் காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், குளிர்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்காய்ச்சல், தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போதல் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றுக்கான மூன்று புதிய அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, மூக்கு ஒழுகுதல், வாந்தி உணர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைஇரண்டு முதல் 14 நாட்களுக்கு இருந்தால் அது கரோனா அறிகுறியாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe