ADVERTISEMENT

கரோனா வைரஸ் எதிரொலி... 10 நாட்களில் கட்டப்பட்ட பிரம்மாண்ட மருத்துவமனை...

05:42 PM Feb 03, 2020 | kirubahar@nakk…

கரோனா வைரஸ் பரவலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சீனாவில் 10 நாட்களில் 1000 பேர் சிகிச்சை பெறுமளவுக்கான பிரம்மாண்ட மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த கரோனா வைரஸ் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவியுள்ளது. சுமார் 14,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 350 க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சீன அரசு ஒருவார காலத்தில் பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டது. அதன்படி வுஹான் நகரில் ஆயிரம் படுக்கை வசதிகளை கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனை திட்டமிட்டப்படியே பத்து நாட்களில் கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 1500க்கும் அதிகமான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோன்ற மற்றொரு மருத்துவமனையும் முடிவுபெறும் தருணத்தில் உள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT