Advertisment

புதிய வகை கரோனாவுக்கு பெயரிட்ட WHO; கவலைக்குரியது என அறிவிப்பு!

WOLRD HEALTH ORGANISATION

Advertisment

தென்னாப்பிரிக்கா நாட்டில்50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529என்ற புதிய கரோனாதிரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்டமரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில்ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைக் ப்ரோட்டினில்பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாக பரவலாம்என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தப் புதிய வகை கரோனா திரிபு, நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரின் நாள்பட்ட தொற்றிலிருந்து உருவாகியிருக்கலாம் எனவும், அந்த நபர் எச்.ஐ.வி. நோய்க்கு சிகிச்சை எடுக்காத நபராக இருந்திருக்கலாம் எனவும்நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில்இந்தப் புதிய வகை கரோனாதிரிபு,போட்ஸ்வானா நாட்டிற்கும் பரவியுள்ளது. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஹாங்காங் வந்த இருவருக்கும்,மலாவியிலிருந்து இஸ்ரேல் திரும்பிய ஒருவருக்கும் இந்தப் புதிய வகை கரோனாதிரிபு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வேறொரு நாட்டிலிருந்து பெல்ஜியம் நாட்டிற்குவந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபருக்கு புதிய வகை கரோனாதிரிபால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், இந்தப் புதிய வகை கரோனாதிரிபு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு நாடுகள் தென்னாபிரிக்காவிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்தும் தங்கள் நாட்டிற்குவர தடை விதித்துள்ளன. அதேபோல்தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் வருபவர்களுக்குத் தீவிர சோதனைகள் நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, புதிய வகை கரோனாதிரிபு அச்சத்தால் உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

இந்தநிலையில்உலக சுகாதார நிறுவனம், நேற்று (26.11.2021) புதிய வகை கரோனாதிரிபு குறித்து சிறப்பு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம், புதிய வகை கரோனாதிரிபை கவலைக்குரியது என அறிவித்துள்ளது. மேலும், இந்தப் புதிய வகை கரோனாதிரிபுக்கு ‘ஓமிக்ரான்’ எனப் பெயரிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த ஓமிக்ரானின்பரவும் தன்மை, தீவிரத்தன்மை, தடுப்பூசி தாக்கம் ஆகியவற்றில் எதாவதுமாற்றம் இருக்கிறதா என்பது குறித்த ஆய்வினைநிறைவு செய்ய சில வாரங்கள் பிடிக்கும் என கூறியுள்ளது.

இந்த ஓமிக்ரான்வகை கரோனாவால், ஏற்கனவே கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதாக முதற்கட்ட ஆதாரங்கள் கூறுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

South Africa world health organaization OMICRON
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe