ADVERTISEMENT

மேலும் ஒரு புதியவகை கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

10:33 AM Jan 12, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனாவில் முதன்முதலில் பரவத் தொடங்கிய கரோனா தொற்று, அதன்பின் உலகமெங்கும் பரவியது. இந்த கரோனா வைரஸ் தொற்று, இரண்டு வகையாக மரபணு மாற்றமடைந்து, ஒரு வகை இங்கிலாந்திலும், இன்னொரு வகை தென் ஆப்பிரிக்காவிலும் பரவத் தொடங்கியது.

இந்தநிலையில் மரபணு மாற்றமடைந்த மேலும் ஒருவகை கரோனா தொற்று, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு வந்த நான்கு பேருக்கு இந்த புதியவகை கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஜப்பான் நாடு அறிவித்துள்ளது. இந்த கரோனா தொற்று, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ்களோடு ஓத்திருப்பதாக ஜப்பான் நாடு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புதியவகை கரோனா தொற்று எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும், கரோனா தடுப்பூசிகள் இந்த புதியவகை கரோனாவிற்கு எதிராக எவ்வளவு தூரம் செயல்படும் என்பதும் உடனடியாகத் தெரியவில்லை என ஜப்பான் கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT