சீனாவில்முதன்முதலில் பரவத்தொடங்கியகரோனாதொற்று, அதன்பின் உலகமெங்கும் பரவியது. இந்த கரோனாவைரஸ்தொற்று, இரண்டு வகையாக மரபணுமாற்றமடைந்து, ஒரு வகை இங்கிலாந்திலும், இன்னொரு வகை தென்ஆப்பிரிக்காவிலும் பரவத்தொடங்கியது.
இந்தநிலையில் மரபணு மாற்றமடைந்த மேலும் ஒருவகை கரோனாதொற்று, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசில்நாட்டில்இருந்து ஜப்பானுக்கு வந்தநான்கு பேருக்குஇந்த புதியவகைகரோனாதொற்று உறுதியாகியுள்ளதாக ஜப்பான் நாடு அறிவித்துள்ளது. இந்த கரோனாதொற்று, இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனாவைரஸ்களோடு ஓத்திருப்பதாக ஜப்பான்நாடு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புதியவகைகரோனா தொற்று எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும், கரோனாதடுப்பூசிகள் இந்த புதியவகை கரோனாவிற்கு எதிராக எவ்வளவு தூரம் செயல்படும் என்பதும் உடனடியாகத்தெரியவில்லை என ஜப்பான்கூறியுள்ளது.