இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. "சுலைமான் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தக்க பதிலடி காத்திருக்கிறது" என அயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சுலைமானுக்கு பதிலாக குவாட்ஸ் படையின் துணைத் தளபதி இஸ்மாயில் கானியை அந்த பிரிவின் தலைவராக நியமித்து அயத்துல்லா காமெனி உத்தரவிட்டுள்ளார்.