Advertisment

எங்க அம்மாவ எப்படி டார்ச்சர் செஞ்சிங்க... பிறந்த உடன் மருத்துவர்களை முறைத்த குழந்தை!

பிறந்த குழந்தை ஒன்று மருத்துவர்களை பார்த்து முறைத்தப்படி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் டிஜீசஸ். கர்ப்பமாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி எடுக்கவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இயல்புக்கு மாறாக அந்த குழந்தை பிறந்தபோது அழவில்லை. அதனால் மருத்துவர்கள் அதை அழ வைப்பதற்காக சில முயற்சிகளில் ஈடுபட்டனர்.

Advertisment

jk

ஆனால் குழந்தை அழாமல் இருந்ததோடு மருத்துவர்களை முறைத்து பார்த்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இயல்பாக பார்ப்பதுதான் நமக்கு முறைப்பது போன்று தெரிவதாக மருத்துவர்கள் கூறினாலும், இணையவாசிகள் குழந்தை பெரியவர்களை போல் முறைத்து பார்ப்பது உண்மைதான் என்று தங்களின் கமெண்ட்களில் தெரிவித்து வருகிறார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தொப்புள் கொடியை வெட்டி எடுக்கும் போதுதான் அந்த குழந்தை அழுதுள்ளது.

VIRAL
இதையும் படியுங்கள்
Subscribe