Advertisment

நெதர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா!

netharland pm resign his post

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நெதர்லாந்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மார்க் ரூட் பிரதமராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நெதர்லாந்து நாடாளுமன்றத்தில்புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்குள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி நிலவி வந்தது. இதனால் மார்க் ரூட் பிரதமராகத்தொடர்வதிலும்நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதிலும் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்துள்ளது.

Advertisment

இந்நிலையில், இந்த மசோதா தொடர்பான விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அதனைத்தொடர்ந்து நெதர்லாந்து பிரதமராக மார்க் ரூட் தனது பதவியைத்தொடருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டேஇருந்துள்ளன. இதையடுத்து மார்க் ரூட் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 150 நாடாளுமன்றத்தொகுதிகளைக் கொண்டநெதர்லாந்து நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறும் எனத்தகவல் தெரிவிக்கின்றன.

Advertisment

resign
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe