இந்தியாவின் அண்டை நாடாக இருப்பது நேபாளம். இந்த நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, நேபாள நாட்டின் குடியரசுத்தலைவர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளார். அரசியல் சாசன சட்டப்படி சட்டப்பிரிவு 76(7)- ஐ பயன்படுத்தி நேபாள நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக அறிவித்துள்ளார்.
மேலும், 275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 12, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாததால் ஷர்மா ஒலி, ஷெர் பகதூர் டியூபா ஆகியோர் ஆட்சியமைக்க அனுமதி வழங்க குடியரசுத்தலைவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.