இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், காட்டுத்தீ பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக அந்தநாட்டில்மழை பொழியாததேஇதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்தக் காட்டுதீதொடர்ந்து பரவிவருவததால், அந்தநாட்டில்காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
நேபாளதலைநகர் காத்மாண்டுவில், காற்றில் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அளவு, 2.5 மைக்ரான்ஸிலிருந்து632 மைக்ரான்ஸ்களாககடந்த 26 ஆம் தேதி அதிகரித்தது. இதனால் நுரையீரல்தொடர்பான நோய் உள்ளவர்களும், கரோனாவால்பாதிக்கப்பட்டவர்களும்மட்டுமின்றி உடல்நலத்துடன் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்துஅந்தநாட்டின்அனைத்து கல்வி நிறுவனங்களும், வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைஅந்தநாட்டின்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.