கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில்பறவைக்காய்ச்சல் பரவிவருகிறது. பறவைக் காய்ச்சலைகட்டுப்படுத்தமத்திய அரசும், அக்காய்ச்சல் பரவியுள்ளமாநிலங்களின் அரசுகளும் தீவிரநடவடிக்கையைஎடுத்து வருகின்றன.
கேரளஅரசு, பறவைக் காய்ச்சலை மாநிலப் பேரிடராகஅறிவித்துள்ளது. இக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவக்கூடியது என்பதால், மற்ற மாநில அரசுகளும்தீவிரமுன்னெச்சரிக்கை நடவடிக்கையைஎடுத்துவருகின்றன.
இந்தநிலையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, நேபாளநாடு, இந்தியாவிலிருந்து கோழி மற்றும் அதுசார்ந்தபொருட்கள்இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது. நேபாளத்தில்இதுவரை பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.