Published on 22/04/2023 | Edited on 22/04/2023

இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே உள்ளது நெடுந்தீவு. இந்த நெடுந்தீவு பகுதியில் இன்று 22ந் தேதி அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் என 5 பேர் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு இறங்குதுறையை ஒட்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டு இந்தக் கொலையை நிகழ்த்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. கொலையாளிகள் தப்பி விடாமல் இருக்க நெடுந்தீவில் இருந்து குறிக்கட்டுவான் செல்லும் படகு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.