Nedundivi incident; one person was arrested

இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே உள்ளது நெடுந்தீவு. இந்த நெடுந்தீவு பகுதியில் இன்று 22ந் தேதி அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் என 5 பேர் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்டபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில்இலங்கையில் உள்ள நெடுந்தீவு மாவிலி துறையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 நபர்களை வெட்டிக் கொலை செய்த முதன்மை குற்றவாளி ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் கனடா குடியுரிமையுள்ள 50 வயதானவர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

இதில் வீட்டு உரிமையாளர் கார்த்திகேசு நாக சுந்தரி (74) நாகநாதி பாலசிங்கம் (75), அவரது மனைவி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (72), வேலாயுதம் பிள்ளை நாகரத்தினம் (76), சுப்ரமணியம் மகாதேவன் (78) ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட அனைவரும் நெருங்கிய குடும்ப உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை இரவு புங்குடுதீவு, 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த சபாரத்தினம் ரகு என்ற 50 வயதானவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் கனடிய (கனடா) குடியுரிமையுடையவர். ஹெரோயின் போதைப்பொருள் பயன்படுத்துபவர். தொடர் போதைப்பொருள் பயன்படுத்துவதால் அவர் இயல்பு நிலையில் இல்லாதவர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

நீண்ட கால பகையை தீர்க்க இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது. கொலையின் பின்னர் 49 பவுன் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளார். தற்போது நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதியவர்கள் தூக்கத்திலிருந்த போது, கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். வீட்டில் 5 முதியவர்கள் இருந்ததாகவும் அவர்களை வெட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். வீட்டிலிருந்த வளர்ப்பு நாய் குரைத்து சத்தமிட, நாயையும் வெட்டியுள்ளார். நாய் காயத்துடன் தப்பித்துக் கொண்டது. இந்த சமயத்தில் அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும் மற்றொரு உறவினர் அங்கு வந்ததாகவும் அவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து வெளியேறி ஒரு படகில் புறப்பட்டு புங்குடுதீவு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கிணற்றில்போட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை நெடுந்தீவு பகுதியை பரபரப்பாகியுள்ளது இந்த கொலை சம்பவம்.