ADVERTISEMENT

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்...

12:42 PM Sep 11, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சொகுசு வாகனங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவிவகித்தபோது, சொகுசு வாகனங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நவாஸ் ஷெரீப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் வெளிவந்த நவாஸ் ஷெரீப், லண்டனில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில், அவரை நாடு திரும்பி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால், அவர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பாத நிலையில், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது பாகிஸ்தான். மேலும், லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் கைது வாரண்ட் பிறப்பிக்கும்படியும், அவரது சொத்துகளை முடக்கவும் பாகிஸ்தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT