பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மூன்று ஊழல் வழக்குகள் போடப்பட்டன. இதில் சொத்து குவிப்பு வழக்கில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வந்தது. அந்த வழக்கில் நவாஸ் செரீப்புக்கு பத்து ஆண்டு சிறை, அவரது மகள் மரியத்திற்கு ஏழு ஆண்டு சிறை மற்றும் அவரின் மருமகன் கேப்டன் சப்தாருக்கு ஒர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

Advertisment

nn

இந்த நிலையில், மீதமுள்ள இரண்டு வழக்குகளின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில், அல்-அஜிஸா இரும்பு ஆலைகள் ஊழல் வழக்கில் நவாஸ் செரீப்புக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷெரிப்புக்கு 17 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்து தேசிய பொறுப்பான்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மற்றொரு ஊழல் வழக்கில் ஷெரீப்புக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.