Skip to main content

மூளும் போர் மேகம்; உக்ரைனை நோக்கி விரையும் நேட்டோ போர்ப்படைகள்!

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

RUSSIA  UKRAINE

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமைப்பு செய்து, அதை தன்னுடன் இணைத்து கொண்டது. மேலும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அந்தநாட்டின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்தநிலையில் தற்போது ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என கூறி வருகிறது. ஆனால் இதனை மற்ற நாடுகள் நம்பவில்லை. உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

 

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என நம்புவதாகவும், உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யர்கள் கடுமையான உயிரிழப்புகளைச் சந்திப்பார்கள்" எனவும் தெரிவித்தார். இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள தங்கள் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களை பிரிட்டன் திரும்ப அழைத்துள்ளது. தூதரகரத்தில் பணியாற்றும் பாதி ஊழியர்கள் நாட்டிற்கு திரும்புவார்கள் என பிரிட்டன் கூறியுள்ளது.

 

அதேபோல் அமெரிக்கா, எந்த நேரத்திலும் படையெடுப்பு நிகழலாம் என கூறி, தனது தூதரக ஊழியர்களின் உறவினர்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே டென்மார்க், ஸ்பெயின், பல்கேரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நேட்டோ நாடுகள், உக்ரைனை பாதுகாக்கும் விதமாக கிழக்கு ஐரோப்பாவிற்கு போர்கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பி வருகின்றன. ஏற்கனவே அமெரிக்கா, உக்ரைனுக்கு  600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமெரிக்கா அதிபர் தேர்தல்; எலான் மஸ்க் முடிவால் திடீர் திருப்பம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
elon musk decide Financing to donald trump

அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.  இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். 

அதே வேளையில், தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரும் நிதி தேவைப்படுவதால், பல முன்னணி தொழிலதிபர்களை, டொனால்ட் டிரம்ப் சந்தித்து நிதியுதவி கோரி வந்தார். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்தவரும், உலகின் பெரும் பணக்காரருமான டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்கை டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தேர்தலில் யார் பக்கமும் இல்லாமல் நடுநிலை வகிக்கப் போவதாக எலான் மஸ்க் திட்டவட்டமாக கூறியிருந்தார்.  இருப்பினும் எலான் மஸ்க், டொனால்டு டிரம்பிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவித்து வந்தன. 

இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எலான் மஸ்க் டொனால்டு டிரம்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். 

elon musk decide Financing to donald trump

டிரம்பின் தேர்தல் செலவுகளுக்காக நிதி திரட்டி வரும், ‘கிரேட் அமெரிக்கா பிஏசி’ என்ற அரசியல் அமைப்புக்கு 45 மில்லியன் டாலர் (ரூ.376 கோடி) வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இந்தத் தொகையைத் தேர்தல் முடியும் வரை மாதந்தோறும் வழங்க அவர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எலான் மஸ்க் தரப்பில் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“8 மாதங்களில் 2 முறை என்னைக் கொல்ல முயற்சி” - எலான் மஸ்க்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
elon musk had faced two assassination attempts in past eight months

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்குத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்து, முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். 

இந்தநிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் காயமடைந்த டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களில் 2 தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக  எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “ஆபத்தான காலம் வரும், கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது. இரண்டு நபர்கள் என்னைத் தனித் தனி சந்தர்ப்பங்களில் என்னைக் கொலை செய்ய முயன்றனர். டெக்ஸாசில் உள்ள டெஸ்லா தலைமையகத்திற்கு அருகில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.