Advertisment

நாசாவையும் விட்டு வைக்காத தகவல் திருட்டு...

sad

இன்றைய இன்டர்நெட் உலகில் தகவல் திருட்டு என்பது அடிக்கடி நடந்து வரும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களின் தகவல்கள்கூட சமீப காலங்களில் திருடப்பட்டன. ஆனால் இவையனைத்தும் தனியார் வசம் இருக்கும் சாதாரண சமூகவலைதளபக்ககங்களே. ஆனால் தற்பொழுது அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் இருக்கும் நாஸாவிலும் இந்த தகவல் திருட்டு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அமைப்பு என கூறப்படும் நாசாவிலேயே இப்படி நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2018 வரை அங்கு வேலை செய்த பணியாளர்கள் குறித்த விவரங்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் திருட்டு கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்றதாக நாசா தெரிவித்துள்ளது. இதனை செய்தவர்கள் யார் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

Advertisment

Breach data NASA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe