Skip to main content

நாசாவையும் விட்டு வைக்காத தகவல் திருட்டு...

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

 

sad

 

இன்றைய இன்டர்நெட் உலகில் தகவல் திருட்டு என்பது அடிக்கடி நடந்து வரும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களின் தகவல்கள் கூட சமீப காலங்களில் திருடப்பட்டன. ஆனால் இவையனைத்தும் தனியார் வசம் இருக்கும் சாதாரண சமூகவலைதள பக்ககங்களே. ஆனால் தற்பொழுது அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் இருக்கும் நாஸாவிலும் இந்த தகவல் திருட்டு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அமைப்பு என கூறப்படும் நாசாவிலேயே இப்படி நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2018 வரை அங்கு வேலை செய்த பணியாளர்கள் குறித்த விவரங்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் திருட்டு கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்றதாக நாசா தெரிவித்துள்ளது. இதனை செய்தவர்கள் யார் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாக நாசா தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த 4 விண்வெளி வீரர்கள்

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

4 astronauts reach the International Space Station

 

விண்வெளி வீரர்கள் 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்ததாக நாசா அறிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி பூமியில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது.

 

இந்தப் பயணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் மொக்பெலியின் தலைமையில் டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் மொஜென்சன், ஜப்பானின் சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் ஆகியோர் அடங்கிய 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். மேலும் இவர்கள் ஒரு வருட காலம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

சந்திரயான் - 3 ஐ கண்காணிக்கும் உதவியில் நாசா

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

 NASA to help track Chandrayaan-3

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3  நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்ற நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலையைத் துவங்கியுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்க தயாராகி வருகின்றனர்.

 

இந்நிலையில் சந்திரயான் - 3 விண்கலத்தை அனுப்ப அமெரிக்காவின் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி முகமையும் உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது. நிலவுக்கு செல்வதற்கான சந்திரயான் - 3  மேற்கொண்ட 3.84 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் முழுவதும் நாசாவும், ஈ.எஸ்.ஏவும் உதவி செய்துள்ளது. நிலவை சுற்றி வரும் தாய்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்விலும் நாசா மற்றும் ஈ.எஸ்.ஏவின் உதவிகள் முக்கியமானது. உலகின் பல இடங்களில் இருந்து அமெரிக்காவின் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் சந்திரயான் - 3ஐ கண்காணிக்கின்றன. அமெரிக்கா நிறுவியுள்ள பிரம்மாண்டமான ரேடியோ ஆன்டெனாக்கள் வழி சந்திரயான் - 3ன்  பயணம் கண்காணிக்கப்படுகிறது.

 

பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையும் 15 மீட்டர் ஆண்டெனாவின் உதவியையும் இஸ்ரோ நாடியுள்ளது. அதேபோல் இங்கிலாந்தின் கூன் கில்லியில் உள்ள 35 மீட்டர் விட்ட ஆண்டெனாவும் சந்திரயானை கண்காணிக்கும் பணியில் உதவி வருகிறது.