ADVERTISEMENT

சூரியபுயல் பற்றிய சோதனைக்கு நாசா அனுப்பும் ‘பார்க்கர் சோலார் புரோப்’

11:48 AM Aug 11, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மனிதன் அறிவியலின் உதவியால் நிலா, செவ்வாய் கிரகம் என அனைத்திலும் தனது தொடர் முயற்சிகளின் மூலம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறான். ஆனால் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிகழ்வுகளுக்கு சூரியன் மட்டும் விதிவிலக்கல்ல. 1970-ஆம் ஆண்டே ஹீலியம்-2 என்ற விண்கலம் சூரியனை ஆராய அனுப்பட்டது. ஆனால் அந்த விண்கலமானது சூரியனிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல் தூரத்திற்கு அருகில் மட்டும்தான் சென்று ஆய்வு செய்தது.

அத்தனை தொடர்ந்து சூரியன் மற்றும் சூரியப்புயல் தொடர்பாக ஆராய நாசா திட்டமிட்டு ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற புது விண்கலத்தை அனுப்பவுள்ளது. இந்த விண்கலமானது சுமார் 1,400 செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சூரியனிலிருந்து 40 லட்சம் மையில் தொலைவிலிருந்து இந்த விண்கலம் ஆய்வு செய்யும் எனவும் நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்க நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இந்த விண்கலம் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. இந்த விண்கலம் தொடர்ந்து 6 வருடம் 11 மாதங்கள் சூரியனை 24 முறை சுற்றிவந்து ஆய்வு செய்யவுள்ளது எனவும் நாசா அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT