moon

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

நாசாவின் பொறியாளரான தாமஸ் சைவட் என்பவர் சர்ச்சை மிகுந்த கருத்துடன் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அதாவது உலகில் வாழும் மக்களுக்கு தொன்றுதொட்டே இறந்தால் நமது ஆத்மா சொர்க்கத்திற்கு செல்லும்அல்லது நரகத்திற்கு செல்லும்என்ற கருத்து இருந்து வருகிறது.

இந்நிலையில் நாசா விஞ்ஞானி தாமஸ் உருவாக்கிய அந்த நிறுவனத்தின் பெயர் ''எலிசியம்'' இந்த நிறுவனம் பற்றி அவர் கூறுகையில், எல்லோரும் இறந்தவுடன் சொர்க்கம் செல்வோம் அல்லது நரகம் செல்வோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் உருவாக்கியுள்ள இந்த நிறுவனம் ஆஸ்ட்ரோஸ்பேஸ் டெக்னோலஜியுடன் இணைந்து இறந்தர்களின் சாம்பலை நிலவில் தூவுவதற்கான ஏற்பாடுகளை செய்யும். உண்மையான சொர்க்கத்திற்கு எனக்கு வழிகாட்ட முடியாதுநிலா எல்லோராலும் விரும்பப்படும் ஒன்றுஅங்கு அஸ்தியை கொண்டு சேர்ப்பது என்பது முடியாத காரியம். அதனால்கண்முன் தோன்றும் நிலா எனும் சொர்க்கத்திற்கு அஸ்தியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

2013-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இதுவரை பலரது அஸ்தி சாம்பல்களை சேகரித்து வைத்துள்ளது. ஆனால் இதுவரை கொண்டுசேர்க்கப்படவில்லை, இதனால் கட்டணம் செலுத்தியவர்கள் எல்லாம் எப்போது நடந்து முடியும் என கேள்விகளை வைத்த வண்ணமாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.