Advertisment

ஜெஃப் பெசோஸ்- எலான் மஸ்க் மோதலால் தள்ளிப்போன நாசா திட்டம்!

elon musk jeff

அமெரிக்க அதிபராகடொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த போது, 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து நிலவில் மனிதர்களை தரையிறக்கும் லேண்டரை வடிவைப்பதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

Advertisment

அதன்தொடர்ச்சியாகஎலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்குலேண்டரை வடிவைப்பதற்கான 2.9 பில்லியன்டாலர் ஒப்பந்தத்தைநாசா வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.

Advertisment

இந்தநிலையில் நாசா நிர்வாகி பில் நெல்சன், இந்த வழக்கின் காரணமாக ஏழு மாதங்களைஇழந்துவிட்டதாகவும், இதன்காரணமாக மனிதர்களைநிலவுக்கு அனுப்பும் திட்டம் 2025 ஆம் ஆண்டிற்கு முன்பு நடைபெற வாய்ப்பேஇல்லைஎனத்தெரிவித்துள்ளார்.

elon musk jeff bezos
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe